திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது.திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ,..
இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ,
மாவட்ட செயலாளர்களுக்கு வர இருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில் மனதில் வைத்து கணக்கின்றி செயல்பட வேண்டும் என்றும் அடுத்த முறையும் திமுக ஆட்சி அமைப்பது உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியதோடு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்றும் தகுதியான வாக்காளர்கள் விடுபடாமல் பார்த்துக் கொள்வதுடன் தகுதியற்ற பெயர்கள் சேர்க்கப்படுவதையும் தடுக்க வேண்டும் என்று 6 இந்த விஷயத்தில் அரசியல் எதிரிகளின் தலையீடு குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அடிமட்ட அளவில் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்றும் இளைஞர்களை அதிக அளவில் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதோடு அரசியல் மற்றும் நிர்வாக ரீதியான முயற்சிகளில் வெற்றி பெற மாவட்ட செயலாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து திட்டமிட்டு ஒழுக்கத்துடன் செயல்பட வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் வாக்காளர்களின் குறைகளை அமைதியாக கேட்டு பொறுமையாக பதில் அளிக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினா நாடாளுமன்ற தொகுதி வாரியாக நியமிக்கப்பட்டுள்ள பார்வையாளர்களுடன் மாவட்ட செயலாளர்கள் மற்றும் அமைச்சர்கள் முழு ஒத்துழைப்பு நல்கி பணியாற்ற வேண்டும் என்றும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் போன்ற முக்கிய அரசு நலத்திட்டங்களின் தரத்தை உறுதி செய்ய அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் வாரந்தோறும் சமையலறைக்கு சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கட்சியின் வெற்றிக்கு உழைக்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் செயல் திறன் அடிப்படையில் மாற்றங்கள் இருக்கும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
Tags :



















