அமைச்சர் கே. என். நேரு மீது அமலாக்கத்துறை ஊழல் குற்றச்சாட்டு.
தமிழக நகராட்சி துறை அமைச்சர் கே .என். நேரு நிர்வாகத்துறையில் ஊழல் குற்றச்சாட்டு குறித்து அமலாக்க இயக்குனரகம் தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைவருக்கு இரண்டு கடிதங்களை அனுப்பி உள்ளது. முதல் கடிதம் அக்டோபர் 27, 2025 அன்று அனுப்பப்பட்டது. அதில் நகராட்சி நிர்வாகத்துறையில் வேலைவாய்ப்பு மோசடி நடந்ததாகவும் ஒவ்வொரு பணிக்கும் சுமார் 25 முதல் 35 லட்சம் வரை லஞ்சம் பெற்றதாகவும் இது 888 கோடி ஊழல் என்றும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. இரண்டாவது கடிதம் டிசம்பர் 3ஆம் தேதி அனுப்பப்பட்டது. இந்த கடிதத்தில் தான் டெண்டர் முறைகேடுகள் மூலம் 1020 கோடி லஞ்சம் பெறப்பட்டதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது .டெண்டர் மதிப்பில் 7.5 விழுக்காடு முதல் 10 விழுக்காடு வரை அமைச்சரின் உறவினர்கள் மற்றும் நெருங்கிய உதவியாளர்கள் மூலம் பெறப்பட்டதாக டிஜிட்டல் ஆதாரங்களுடன் 258 பக்க அறிக்கை அமலாக்கத்துறை இணைத்துள்ளது . இந்த இரு கடிதங்களிலும் அமலாக்கத் துறை பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணையை தொடங்குவதற்கு ஏதுவாக மாநில காவல் துறை இந்த குற்றச்சாட்டுகள் குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு தமிழக தலைமைச் செயலாளருக்கும் தமிழக காவல்துறை தலைவருக்கும் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையையும் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கள் உள்நோக்கம் கொண்டதாக அமைச்சர் கே .என். நேரு மறுத்துள்ளதோடு அவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றும் பதிலளித்துள்ளார்.
Tags :


















