புதுச்சேரியில் 92.41% மாணவர்கள் தேர்ச்சி

by Staff / 06-05-2024 11:20:21am
புதுச்சேரியில் 92.41% மாணவர்கள் தேர்ச்சி

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற +2 தேர்வு முடிவுகள் இன்று(மே 6) வெளியாகி இருக்கின்றன. இதில் தமிழகத்தில் தேர்ச்சி விகிதம் 94.56 சதவீதமாக இருக்கும் நிலையில், புதுச்சேரியில் தேர்ச்சி விழுக்காடு 92.41 சதவீதமாக உள்ளது. கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தேர்வில், புதுச்சேரி மற்றும் காரைக்காலை சேர்ந்த 6566 மாணவர்களும், 7446 மாணவிகளும் என 14,012 பேர் தேர்வு எழுதினர். இதில் 12,948 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாக புதுச்சேரி கல்வி இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 

Tags :

Share via