கொல்லம் மாவட்ட திமுக செயலாளர் மீது தாக்குதல் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி நாளை பந்த்.

கேரள மாநில திராவிட முன்னேற்றக் கழக கொல்லம் மாவட்ட கழகச் செயலாளர் ரெஜி ராஜ் மீது கடந்த 10-11-2024 காலையில் ஆறு பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களால் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான மாவட்ட செயலாளரை பொதுமக்கள் மீட்டு புனலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்துள்ளனர். இந்த தகவலை அறிந்து கேரள மாநில திமுக அமைப்பாளர் கே ஆர் முருகேசன், தென்காசி தெற்கு மாவட்ட முன்னாள் செயலாளர் சிவ பத்மநாதன் மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் துரை பேச்சிமுத்து, தென்காசி மாவட்ட கழக உறுப்பினர்கள், கேரள மாநில கழக உறுப்பினர்கள் ஆகியோருடன் சென்று புனலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்க்கப்பட்ட ரெஜிராஜ் சந்தித்து ஆறுதல் கூறினார்கள். கடந்த இரு மாதங்களுக்கு முன்பு அரசியல் காழ்ப்புணர்ச்சியில் மர்ம நபர்கள் கொல்லம் மாவட்ட திமுக அலுவலகத்தை உடைத்தும் மாவட்ட கழக செயலாளர்க்கு கொலை மிரட்டலும் விடுத்துச் சென்றுள்ளனர். அப்போதே மாநில அமைப்பாளர் கே ஆர் முருகேசன் புனலூர் காவல் நிலையத்தில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்தும் இதுவரை காவல்துறை நடவடிக்கை எடுக்காததாலும், திமுகவின் வளர்ச்சியை கண்டு பொறாமை கொண்டு நேரடியாக இந்த கொலைவெறி தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் மீது 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புனலூர் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று மேற்படி சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் காவல்துறையினர் 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்றும் மீறினால் நாளை புனலூர் மாநகரப் பகுதியில் பந்த் நடத்தப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags : கொல்லம் மாவட்ட திமுக செயலாளர் மீது தாக்குதல்