கடையநல்லூரில் புர்கா அணிந்து ஓடும் பஸ்சில் நகை பறித்த பெண் சிக்கினார்.5 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகள் மீட்பு.

by Editor / 10-09-2023 08:46:57pm
கடையநல்லூரில் புர்கா அணிந்து ஓடும் பஸ்சில் நகை பறித்த பெண் சிக்கினார்.5 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகள் மீட்பு.


தென்காசி கடையநல்லூர் அருகே அருகே உள்ள சொக்கம்பட்டி திரிகூடபுரத்தை சேர்ந்தவர் இசக்கிமுத்து இவரது மனைவி சண்முகத்தாய் வயது 58  கடந்த 3 தேதி தன்னுடைய உறவினர் வீடான அச்சன்புதூருக்கு  கடையநல்லூர் அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் இருந்து பஸ் ஏறி சென்ற பொழுது இவரது  கழுத்தில் கிடந்த 48 கிராம் எடை கொண்ட தங்கச் செயினை யாரோ மர்ம நபர்கள் பறித்துச் சென்றது தெரிய வந்தது உடனடியாக  இது குறித்து கடையநல்லூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்

இதுபோன்று கடந்த மாதம் கடந்த 28ஆம் தேதி கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபுரம் பெரிய தெரு சேர்த்தியன் மனைவி ஜோதி பாலா வயது 26 இவளுடைய மகள் மாஞ்சிக்கு உடல்நிலை சரியில்லாததால் கடையநல்லூர் அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் இருந்து  தென்காசி மருத்துவமனை அழைத்துச் சென்ற பொழுது மகள் மாஞ்சியின் கழுத்தில் கிடந்த 24 கிராம் தங்கச் செயினை மர்ம நபர் யாரோ பறித்துச் சென்றது தெரியவந்தது உடனே இது குறித்து கடையநல்லூர் காவல் நிலையத்தில் புகார் புகார் அளித்தார்.
 தனிப்படை அமைப்பு

கடையநல்லூர் பகுதிகளில் கோவில் திருவிழாக்கள் பஸ் நிலையம் கூட்டம் நெரிசல் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து திருட்டு நடப்பதை கண்காணித்து குற்றவாளிகளை உடனே கைது செய்ய தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு சாம்சன் உத்தரவின் பேரில் புளியங்குடி டிஎஸ்பி அசோக் மேற்பார்வையில் கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் திருட்டு நடைபெற்ற பேருந்து நிலையங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த பொழுது கடையநல்லூர் மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் புர்கா அணிந்த இரண்டு பெண்கள் சிறுமி கழுத்தில் கிடந்த தங்கச் செயினை பறித்துச் செல்லும் காட்சி தெரியவந்தது இதனைத் தொடர்ந்து தனிப்படையினர் தமிழ்நாடு முழுவதும் புர்கா அணிந்து திருடும் கும்பலை தேடி வந்த நிலையில் கடையநல்லூர் புதிய பேருந்து  நிலையத்தில்  பயணிகளிடம் செயின் பறிப்பில் ஈடுபட காத்திருந்தபொழுது தனிப்படை போலீசார் அந்தப் பெண்ணை  சுற்றி வளைத்தனர்.
 போலீசார் நடத்திய விசாரணையில் கடையநல்லூர் பகுதிகளில் முஸ்லிம் பெண்களைப் போல் வேடமிட்டு புர்கா அணிந்து செயின் பறிப்பில் ஈடுபட்ட  பெண் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி  அருகே உள்ள ராஜகோபால் நகர் மந்தித்தோப்பு பகுதியை சேர்ந்த திருப்பதி  என்பவரின் மனைவி  அய்யம்மாள் வயது (35 )என்பது தெரிய வந்தது.

போலீசார் அவரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் தெரிய வந்தது.அதில்,  அய்யம்மாளை தமிழகத்தில் உள்ள எந்தெந்த கோவில்களில் எந்த நாளில், எந்த தேதியில் திருவிழா வருகிறது என்பதை முன்கூட்டியே அறிந்து அந்த பகுதிகளுக்கு சென்று கூட்ட நெரிசலை பயன்படுத்தி
கைவரிசை காட்டியது தெரிய வந்தது. திருவிழா நேரங்களில் அந்தந்த ஊருக்கு சென்று நோட்டமிட்டு பக்தரைப் போல் வேஷமிட்டு நகை பணத்தை பறித்து செல்வதும்  முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் ஊர்களுக்கு சென்று பேருந்து நிலையம் கூட்ட நெரிசல் போன்ற இடங்களில் முஸ்லிம் பெண்ணை போல்வேடமிட்டு புர்கா அணிந்து திருடியது தெரியவந்தது. விசாரணையில் அய்யம்மாளிடமிருந்து சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 10 பவுன் தங்கச் செயின்கள் மீட்கப்பட்டது.  
தென்காசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதைத்தொடர்ந்து அய்யம்மாளை  திருநெல்வேலி பெண்கள் சிறையில்    அடைத்தனர்.  வாசுதேவநல்லூர் புளியங்குடி உள்பட பல்வேறு  காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட செயின் பறிப்பு வழக்குகளில் அய்யம்மாளை  விசாரணை செய்ய இவளை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க  தனிப்படை போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

 

Tags : கடையநல்லூரில் புர்கா அணிந்து ஓடும் பஸ்சில் நகை பறித்த பெண் சிக்கினார்

Share via