லால்குடி அருகே எம்ஜிஆர் சிலை உடைப்பு.

by Editor / 18-11-2023 10:33:03pm
லால்குடி அருகே எம்ஜிஆர் சிலை உடைப்பு.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ரெட்டி மாங்குடியில் உள்ள 5 அடி உயரம் கொண்ட எம்ஜிஆர் சிலையை மர்ம நபர்கள் கடந்த அக்டோபர் 22ஆம் தேதி சேதப்படுத்திய நிலையில் மீண்டும் நேற்று இரவு இரண்டாவது முறையாக சேதப்படுத்தி இருப்பதைக் கண்டு பொதுமக்கள் மற்றும் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.சம்பவ இடத்தில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது லால்குடி காவல் துணை கண்காணிப்பாளர் அஜய் தங்கம், சிறுகனூர் காவல் ஆய்வாளர் சுமதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

 

Tags : லால்குடி அருகே எம்ஜிஆர் சிலை உடைப்பு.

Share via

More stories