மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகள் விடுமுறை.

by Editor / 18-11-2023 10:34:40pm
 மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகள் விடுமுறை.

திருவண்ணாமலை வட்டம் மற்றும் நகரம் அண்ணாமலையார்  திருக்கோயில் 2023ம் ஆண்டு திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை நகரப் பகுதிக்கு அருகாமையில் இயங்கி வரும் அரசு சில்லறை மதுபானக் கடை எண் 948) (காமராஜர் சிலை அருகில்), எண்:9361 (மணலூர்பேட்டை சாலை), கடை எண்:9490 வேங்கிக்கால் (புறவழிச்சாலை பைபாஸ்) மற்றும் திருவண்ணாமலை நகரத்தின் உள்பகுதியில் இயங்கி வரும் மதுபானக் கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் முன்னான் இராணுவ வீரர்களுக்கான அங்காடி, ஆகிய உரிமம் பெற்ற மதுபானக்கடைகள் மற்றும் மதுக்கூடங்களுக்கு 25.11.2023 அன்று நண்பகல் 12.00 மணி முதல் 27.11.2023 அன்று இரவு 10.00 வரை 3 நாட்களுக்கு மதுவிற்பனை நடைபெறாமல் மூடிவைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

 

Tags : டாஸ்மாக் கடைகள் விடுமுறை...

Share via

More stories