93 லட்சத்தை தாண்டியது பாதிப்பு ....துருக்கியை துரத்தும் கொரோனா

by Admin / 27-12-2021 12:03:30pm
 93 லட்சத்தை தாண்டியது பாதிப்பு ....துருக்கியை துரத்தும் கொரோனா

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. 

அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா இரண்டாம் இடத்திலும், பிரேசில் 3-ம் இடத்திலும் உள்ளது.
  
உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பட்டியலில் துருக்கி தற்போது 6-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், துருக்கி நாட்டில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 93 லட்சத்தைக் கடந்துள்ளது.
 
அங்கு கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 81 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
 
மேலும், கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 89.43 லட்சத்தைக் கடந்துள்ளது. சுமார் 2.81 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
 

 

Tags :

Share via

More stories