புளியங்குடி அருகே  மூன்று நாட்கள் போராட்டத்திற்கு பிறகு முதியவரின் உடல் அடக்கம்.

by Editor / 07-02-2024 12:09:52am
புளியங்குடி அருகே  மூன்று நாட்கள் போராட்டத்திற்கு பிறகு முதியவரின் உடல் அடக்கம்.

கடையநல்லூர் தாலுகா புளியங்குடி அருகே   ஈச்சம்பொட்டல்புதூர்    கிராமத்தை சேர்ந்த சின்னசாமி என்பவர் வயது முதிர்வு காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இறந்து விட்டார். அவரது உடலை சுடுகாட்டிற்கு கொண்டு செல்ல பாதை அமைத்து தரக்கோரி இறந்தவரின் உடலை அடக்கம் செய்யாமல்   மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்  சம்பவம் நடந்த கிராமத்திற்கு தென்காசி கோட்ட ஆட்சித் தலைவர் லாவண்யா கடையநல்லூர் தாசில்தார் சுடலை மணி கூடுதல் டி எஸ் பி தன்ராஜ் கணேசன், தெய்வம் டிஎஸ்பி ஆரோக்யராஜ் திருவேங்கடம் இன்ஸ்பெக்டர்
 உட்பட 200க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர் தொடர்ந்து கோட்டாட்ச்சித் தலைவர் பேச்சுவார்த்தையில் இன்று  காலையில் சுமுகமான முடிவு ஏற்பட்டது தொடர்ந்து   மற்றொரு சமூகத்தினர் தங்களின் பட்டா நிலத்திற்குள் பிரேதத்தை கொண்டு செல்லக்கூடாது என கூறி நிலத்தை மறித்து ஆண்கள் பெண்கள் அனைவரும் நிலத்தில் உட்கார்ந்து போராட்டம்  நடத்தினர் அதன் பின்னர் இருதரப்பு மக்களிடையேதும் வருவாய்த்துறை  காவல்துறையினர் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி உடன்பாடு ஏற்பட்டது.

இதனடையில் இறந்த சின்னச்சாமி  தரப்பில் உயர்நீதிமன்றத்தில் சுடுகாட்டுக்கு பாதை கேட்டு அவசரம் மனு தாக்கல் செய்தனர் அந்த மனுவில் உயர் நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது அதில் வருவாய்த்துறை காவல்துறை இருதரப்பினை அழைத்து உயர்   பேச்சுவார்த்தை நடத்தி மாலை நான்கு மணிக்குள்  இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய வேண்டும் அதன் பின்னர் 

  நிரந்தரமாக இருதரப்பை மக்களையும் அழைத்துப் பேசி  சுடுகாட்டுக்கு நிரந்தரமான பாதை அமைக்க வேண்டும் என கூறியுள்ளது.  இறுதியில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு தற்போது இந்த ஒரு முறை மட்டும் அடக்கம் செய்வதற்கு ஒரு தரப்பினர் சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து சின்னச்சாமி  உடல் தகனம் செய்யப்பட்டது.

 

Tags : புளியங்குடி அருகே  மூன்று நாட்கள் போராட்டத்திற்கு பிறகு முதியவரின் உடல் அடக்கம்

Share via