முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தாய் குறித்து பேசியதற்கு செங்கோட்டையன் மன்னிப்பு.

முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தாய் குறித்து பேசியதற்கு செங்கோட்டையன் மன்னிப்பு கேட்டுள்ளார். செங்கோட்டையன் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து உதயகுமார் வீடியோ வெளியிட்டது குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது, அதற்கு ’அவர் அம்மா இறந்துவிட்டார் அதை பார்க்க சொல்லுங்கள்’ என காட்டமாக கூறினார். தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்ட செங்கோட்டையன், ”உதயகுமார் தாயாருக்கு கண்ணீர் அஞ்சலி. ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்” என்றார்.
Tags : முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தாய் குறித்து பேசியதற்கு செங்கோட்டையன் மன்னிப்பு