மதுரையில்மாலையில் வெளுத்து வாங்கிய கனமழையால் சாலையெங்கும் தேங்கிநின்ற மழைநீர்.

மதுரை மாவட்டம் முழுவதிலும் இன்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது மாலை 4 மணி வரை கொளுத்திய வெயிலின் தாக்கத்தால் மதுரை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கானலில் மழை நீர் போல தென்பட்டது.
பொதுமக்கள் வெளியில் நட முடியாத அளவிற்கு காலை முதல் மாலை 4 மணி வரை வெயில் சுட்டரெத்த நிலையில் திடீரென மாலை 5 மணிக்கு மேகமூட்டம் தொடங்கி இருள் சூழ்ந்த நிலையில் மாவட்ட முழுவதிலும் கனமழை பெய்யத் தொடங்கியது.
மதுரை மாநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அண்ணா பேருந்து நிலையம் ,சிம்மக்கல் ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி , ரயில்வே நிலையம், காமராஜர் சாலை ,அவனியாபுரம் ,அண்ணா நகர் ,ஆனையூர் முனிச்சாலை ,தெற்கு வாசல் , கடச்சனேந்தல் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழையானது தொடர்ந்து பெய்து வருகிறது.
சாலைகளில் மழை நீர் தேங்கியது. இதன் காரணமாக சாலையில் செல்லக்கூடிய வாகனங்கள் மழை நீரில் மூழ்கிய படி சென்றன கனமழை காரணமாக மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது மேலும் பள்ளி, கல்லூரி முடிந்து வீடுகளுக்கு செல்லக்கூடிய மாணவ மாணவிகள் பேருந்து நிலையங்களிலே நீண்ட நேரமாக காத்திருந்தனர்.
Tags : மதுரையில்மாலையில் வெளுத்து வாங்கிய கனமழையால் சாலையெங்கும் தேங்கிநின்ற மழைநீர்