பத்ம விருது அளித்த மத்திய அரசுக்கு நன்றி- நடிகர் அஜித் குமார்

பத்மபூஷன் விருது வென்றுள்ள நடிகர் அஜித் குமார் தனது கனவு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருப்பதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.திரைத்துறை மற்றும் சர்வதேச கார் பந்தயத்தில் சிறந்து விளங்கியதற்காக நடிகர் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. டெல்லியில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, அஜித்துக்கு விருது வழங்கி கௌரவித்தார்.இந்த நிலையில் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு நடிகர் அஜித் குமார் அளித்த பேட்டியில், பத்ம விருது அளித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தார். விருது அறிவிக்கப்பட்ட போது கற்பனை போன்று இருந்ததாகவும், சரியான பாதையில் தான் செல்கிறோம் என தமக்கு தோன்றியதாகவும் அவர் அந்த பேட்டியில் கூறினார்.
Tags : நடிகர் அஜித் குமார்