பஞ்சாப்பில் கள்ளச்சாராயம் குடித்து 21 பேர் பலி ரூ.10 லட்சம் நிவாரணம்.

பஞ்சாப்பில் கள்ளச்சாராயம் குடித்து 21 பேர் பலியான நிலையில், ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. அமிர்தசரஸில் உள்ள 5 கிராமங்களில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க அம்மாநில முதலமைச்சர் பகவந்த் மான் உத்தரவிட்டுள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழகத்தின் கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Tags : பஞ்சாப்பில் கள்ளச்சாராயம் குடித்து 21 பேர் பலி ரூ.10 லட்சம் நிவாரணம்.