ஓட்டுநர் இல்லாத தானியங்கி காரில் பயணித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

by Staff / 02-09-2024 11:57:41am
ஓட்டுநர் இல்லாத தானியங்கி காரில் பயணித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அமெரிக்க சுற்றுப்பயணத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜாகுவார் நிறுவனத்தின் டிரைவர் இல்லாத தானியங்கி காரில் பயணித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவிலிருந்து ,தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 27-ம் தேதி அமெரிக்கா சென்றுள்ளார். செப்டம்பர் 12-ம் தேதி வரை பல்வேறு நிறுவனங்களின் நிறுவனத் தலைவர்களை சந்தித்து முதலீடு குறித்து பேச்சு வாா்த்தை நடத்த உள்ளார்.

 

Tags :

Share via