மழை வேண்டி எல்லை தெய்வத்திற்கு கறிச்சோறு மற்றும் அசைவ விருந்து படையல் வைத்து கிராமத்தினர் வழிபட்டனர்.

by Editor / 28-09-2022 08:02:11am
மழை வேண்டி எல்லை தெய்வத்திற்கு கறிச்சோறு மற்றும் அசைவ விருந்து படையல் வைத்து கிராமத்தினர் வழிபட்டனர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அண்ணாதுரை சிலை அருகே மானாமதுரையின் எல்லை தெய்வமாக எல்லைப்பிடாரி அம்மன் கோயில் உள்ளது. புரட்டாசியில் செவ்வாய் சாட்டுதல் விழா கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இந்தாண்டு விழாவை முன்னிட்டு மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் கிராமத்தார்கள் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காப்புக்கட்டி விரதம் இருந்து வருகின்றனர்.


 விழாவின் முக்கிய நிகழ்வான நேற்று இரவு புது மண் சட்டிகளில் பணியாரம், கொழுக்கட்டையுடன் கறிச்சோறு, நாட்டுக்கோழி, கருவாடு, ஆட்டுகறி, முட்டை, மீன் உள்ளிட்ட அசைவ உணவுகளை தங்களது வீடுகளில் தயாரித்து மண்சட்டியில் தீப்பந்த விளக்கு ஏற்றி கிராம மக்கள் மானாமதுரை பழைய பேருந்து நிலையம் பகுதியிலிருந்து நகரின் முக்கிய வீதிகளின் வழியே ஊர்வலமாக வந்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர்.

மேலும் கோயில் பூஜாரிகள் எல்லை தெய்வமான எல்லைபிடாரி அம்மனுக்கு சிறப்பு அபிேஷகங்களும்,ஆராதனைகளும் நடத்தினார்.இதில் கிருஷ்ணராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

 

Tags :

Share via