வாட் வரியை குறைக்காத 10 மாநிலங்கள்

by Admin / 13-11-2021 06:21:38pm
வாட் வரியை குறைக்காத 10 மாநிலங்கள்

பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்காத 10 மாநிலங்கள்...

பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்கள் இதுவரை வாட் வரியை குறைக்கவில்லை.
 
பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை 25 மாநில மற்றும் யூனியன் அரசுகள் குறைத்துள்ளது. அதே சமயம், தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்கள் இதுவரை வாட் வரியை குறைக்கவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 3ம் தேதி மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை குறைத்தது; பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாயும் டீசல் லிட்டருக்கு 10 ரூபாய் கலால் வரியிலிருந்து குறைக்கப்பட்டது. மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து பல்வேறு மாநிலங்கள், மாநில அரசு விதிக்கக் கூடிய வாட் வரியை குறைக்க முன்வந்தது.
 
 இதுவரை 25 மாநில மற்றும் யூனியன் அரசுகள் மக்களுக்கு நிவாரணம் அளிக்கக்கூடிய வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 மகாராஷ்டிரா, டெல்லி, மேற்குவங்கம், தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, கேரளா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் இன்னும் பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைக்கவில்லை எனவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட் வரியை குறைக்காத மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 100ல் இருந்து 118 ரூபாய் ரூபாய் வரை விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via