ராஜராஜ சோழனின் 1036-வது சதய விழா
ராஜராஜ சோழனின் 1036-வது சதய விழா... மின்னொளியில் ஜொலித்த பெரிய கோயில்...
மாமன்னர் ராஜராஜ சோழனின் 1036-வது சதய விழாவை முன்னிட்டு, தஞ்சை பெரிய கோயில் முழுவதும் மின்னொளியில் ஜொலித்தது.
தஞ்சாவூர் பெரிய கோயிலை கட்டி, தமிழகத்துக்கு பெருமை சேர்த்த மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாளான ஐப்பசி சதயநட்சத்திரம் அன்று, சதய விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், மாமன்னர் ராஜராஜ சோழனின் 1036-வது சதய விழா இன்று கொண்டாடபடுகிறது.
தஞ்சை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சதய விழா வழக்கமாக 2 நாட்கள் நடைபெறும். ஆனால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டை போல நடப்பு ஆண்டும் ஒருநாள் மட்டுமே விழா நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலையில் மங்கள இசைக்கு பின்னர் மாமன்னர் ராஜராஜசோழன் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து. பெருவுடையார் பெரியநாயகி அம்மன் திருமேனிக்கு பேரபிஷேகம் மட்டுமே நடைபெறும்.
சதய விழாவை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவில் பிரகாரம், சுற்றுச்சுவர் மற்றும் சோழன் சிலை முழுவதும் மின்னொளியில் ஜொலித்தது. இதனை உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் கண்டு ரசித்தனர்.
Tags :