ஏழுமலையான் கோவிலில் 5 நாட்களில் 3 லட்சம் பக்தர்கள் தரிசனம்
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 21-ந் தேதி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அனைத்து வகையான தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டன.
மூன்று மாதங்கள் ஏழுமலையானுக்கு தனிமையில் பூஜைகள் நடந்தன. பிறகு கொரோனா கட்டுப்பாடு தளர்வுகள் காரணமாக பின்னர் குறைந்த எண்ணிக்கையில் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தற்போது கொரோனா பரவல் குறைந்து விட்டதால் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
அதேபோன்று திருப்பதியில் டைம்ஸ்லாட் டோக்கன்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களால் திருமலையில்கூட்டம் அலைமோதுகிறது.
இதனால் கடந்த 24-ந் தேதி முதல் 28-ந் தேதிவரை 2 லட்சத்து 99 ஆயிரத்து 630 பேர் தரிசித்துள்ளனர். உண்டியல் வருமானமாக ரூ.20.56 கோடி கிடைத்துள்ளது.
Tags :