ஒற்றை தலைமை காலத்தின் கட்டாயம் - அதிமுகவில் பிளவு இல்லை - முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ

by Editor / 19-06-2022 09:52:17pm
ஒற்றை தலைமை காலத்தின் கட்டாயம் - அதிமுகவில் பிளவு இல்லை - முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ

அதிமுகவின் பொதுக்குழு வரும் 23ந்தேதி நடைபெறவுள்ள நிலையில் ஒற்றை தலைமை குறித்து பிரச்சினை எழுந்துள்ளது. ஓபிஎஸ், இபிஎஸ் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். சிலர் ஓபிஎஸ்க்கும், இபிஎஸ்க்கும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் முன்னாள் செய்தி துறை அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ . ராஜூ எவ்வித கருத்தும் தெரிவிக்கமால் இருந்துவந்த நிலையில்   தற்போது கட்சி நிர்வாகிகளுடன் சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகத்தில் திடீரென ஆலோசனை நடத்தினார். இதில் பொதுக்குழு உறுப்பினர் 29 பேர் மற்றும் சிறப்பு அழைப்பாளர் முன்னாள் எம்எல்ஏ சின்னப்பன் என 30 பேர் கலந்து கொண்டனர். பொதுக்குழு மற்றும் தீர்மானங்கள் குறித்தும்,கட்சியின் இன்றைய நிலை குறித்தும் ஆலோசனை நடத்தினர்.

இதனை தொடர்ந்து அதிமுகவில் உள்கட்சி தேர்தல் நடைபெற்று, அதற்கு ஒப்புதல் பெற பொதுக்குழு கூட்டம் நடத்தவது வழக்கமான ஒன்று, இது தொடர்பாக தலைமைக் கழகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற போது, பெரும்பாலான கட்சி நிர்வாகிகள் ஒற்றை தலைமை வேண்டும் என்றனர். இது கலத்தின் கட்டாயம், சிறிய கட்சிகள் கூட ஒற்றை தலைமையின் கீழ் செயல்பட்டு வருகின்றன. இது தொடர்பாக இன்று ஆலோசனை நடத்தியதில் அனைத்து உறுப்பினர்களும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். அவர்கள் முடிவு தான் என்னுடைய முடிவு , இன்றைக்கு நாளிதழ்களில்  விளம்பரம் கொடுத்ததில் மாறு பட்ட கருத்து உண்டு , ஓபிஎஸ் யார் என்பது மக்களுக்கு தெரியும், அவர் விளம்பர படுத்த வேண்டிய சூழ்நிலை இல்லை,உள்ளாட்சி தேர்தல் ஏன் நடத்தாமல் இருந்தது அவருக்கு தெரியும். துணை முதல்வராக இருந்த போது இந்த கருத்தினை வலியுறுத்தி இருக்கலாம். அதிமுகவில் பிளவு என்பது கிடையாது. ஒபிஎஸ் அவர் கருத்தினை தெரிவித்து உள்ளார்.என்றார்.

 

Tags : The compulsion of a single leadership - no split in the AIADMK - Former Minister Kadampur S. Raju

Share via