உடல் எடை குறைந்தால் ஆரோக்கியம் தானாக வரும்

by Admin / 28-03-2022 03:13:01pm
உடல் எடை குறைந்தால் ஆரோக்கியம் தானாக வரும்


உடல் ஆரோக்கியம் பேச்சளவில் இல்லாமல் மனதளவில் இருக்க வேண்டும். உணவுகளின் சுவை கலந்த வாசனை பலரை நிலை தடுமாற வைக்கிறது.நாக்கை கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல்,கிடைப்பதெல்லாம்சாப்பிடுமாறு புத்தி கடட்ளை இடுகிறது. சாப்பிட்டுவிட்டு ஒரு மணிநேரம் நடந்தால் சரியாகிவிடும்  என்ற  எண்ணத்தை தோற்றுவித்துவிடுகிறது.அதனால்,சாப்படுவதில் கட்டுப்பாடுகள் விதிக்க இயலாமல் பலர்  தெரிந்தே உடல் எடையை  அதிகரிக்கச்செய்கிறார்கள்.பயணங்களின் பொழுதோஅல்லது பசி எடுக்கிறபொழுது உடன் சாப்பிட வாங்குவது ,இல்லை சாப்பிட நினப்பது நொறுக்குத்தீனிகளைத்தான்.அதுவும் உப்பு ,காரம் கலந்த உருளைக்கிழங்கு சிப்ஸாகத்தானிருக்கும். இது போன்ற உடனடி பசி  நிவாரணிகளால் உடல் எடை அதிகரிக்க அதிக வாய்ப்புண்டு.அதோடு வீட்டில் ஓய்வு நாளில்   எந்தவிதமான உடல்சார்பணிகளை மேற்கொள்ளாது ஒரே இடத்திலிருந்து தொலைக்காட்சிபார்ப்பது,மொபைலில்   எதையாவது தேடிக்கொண்டருப்பது ,கணினியில் வேலை செய்வது ...அப்பொழுது வீட்டாரால் தரப்படும் தின்பண்டங்ள், உணவு உண்பதால் வயிறு அதுசார்ந்த இரைப்பை வேலை செய்துகொண்டேயிருக்கும்.அதன் செயல்பாட்டால் உடல்  எடை அதிகரிக்கும்.பக்கத்திலிருக்கிற கடைக்குக்கூட நடந்து போகாமல் வாகனங்களை அதிகமாகப்பயன்படுத்துவதால் உடலில் எடை கூட வாய்ப்புண்டு.பெண்களுக்கு உடல் எடை அதிகரிக்க வாய்ப்புகள் அதிகமுண்டு.குழந்தை பேறு, சாப்பாடு அதிகமாக சமைத்து விட்டோம் வீணாக போய்விடுமே என்ற அக்கறையில் ,அன்றைய பொழுதில் அதிகமாக சாப்பிடுவது காரணமாக உடல் எடை அதிகரிக்க செய்யும்.அதனால்,உணவு விசயத்தில் கவனமாக இருந்து  முறையான உடற்பயிற்சி மேற்கொண்டால் போதும் உடல் எடையைக்குறைத்து விடலாம்.தினமும் குறைந்த பட்ச நடைபயிற்சியை கடமையாகச்செய்து வர வேண்டும்.சிலர் உடல் வாகு என்ன சாப்பிட்டாலும் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்காது.சிலர் அதிகம் சாப்பிடாவிட்டாலும் புசுபுசுவென்று உடல் பருத்து விடும்.எல்லாவற்றிற்கும் அடிப்படை
எல்லாநேரங்களிலும் சாப்பிடுவதைத்தவிருங்கள்.எண்ணெய்.கொழுப்பு,இனிப்பு,பொறித்த உணவுகளை அதிக ஆர்வத்துடன் சுவையாக இருக்கிறதென்பதற்காகச்சாப்பிடாதீர்கள்.வெந்நீர் குடித்து வாருங்கள்.இயற்கையாகவே உடல் எடை பிரச்சனை வராது.

 

Tags :

Share via