காதலிக்கச் சொல்லி 15 வயது சிறுமியை தொந்தரவு செய்து மிரட்டிய இளைஞர் கைது

by Staff / 28-03-2022 03:05:40pm
காதலிக்கச் சொல்லி 15 வயது சிறுமியை தொந்தரவு செய்து மிரட்டிய இளைஞர் கைது

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே காதலிக்க மறுத்த 15 வயது சிறுமியை  அவருக்கே தெரியாமல் புகைப்படம் எடுத்து மார்பிங் செய்து வெளியிட்டு விடுவதாக மிரட்டி இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

ஓட்டர்கரட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 22 வயதான நந்தகுமார் என்ற அந்த இளைஞர் சிறுமி கூட்டுறவு பால் பண்ணைக்குபாலு ஊற்ற  தனது சைக்கிளில் செல்லும்போது அவரை பின்தொடர்ந்து சென்று தன்னை காதலிக்குமாறு கூறி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் சிறுமிக்கே  தெரியாமல் அவரை புகைப்படம் எடுத்த நந்தகுமார் போட்டோக்களை ஆபாசமாக சித்தரித்து நண்பர்களுக்கு அனுப்பி விடுவேன் என்றும் பெற்றோருடன் கூறினால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் அச்சம் அடைந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறி இருக்கிறார் சிறுமியின் பெற்றோர் கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் நந்தகுமாரை போலீசார் கைது செய்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo