சுசித்ரா முன்னாள் கணவர் மீது காவல் ஆணையரிடம் புகார்
பாடகி சுசித்ரா முன்னணி திரைப்பட நட்சத்திரங்கள் குறித்து பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அதன் ஒரு பகுதியாக தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் ஒரு ஓரின சேர்க்கையாளர் என்று பேசினார். இதற்கு விளக்கம் அளித்து கார்த்திக் குமார் பேசுவது போன்ற ஒரு ஆடியோ வெளியானது. அதில் பட்டியலின பெண்கள் குறித்து அவதூறாக பேசியது பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் கார்த்திக் குமார் மீது சென்னை காவல் ஆணையரிடம் வழக்கறிஞர் கவுதம் புகார் அளித்துள்ளார்.
Tags :