துணை முதல்வராகும் உதயநிதி ஸ்டாலின்

திமுக சார்பாக நடத்தப்படும் இளைஞரணி மாநாட்டிற்கு பின் இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டு முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று திமுக தலைவராக 5 ஆண்டுகளை நிறைவு செய்து 6-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். 1967ல் தனது 14 வயதில் அரசியலில் காலடி பதித்த ஸ்டாலின், 1982ல் திமுக இளைஞரணி செயலாளரானார். 2009ல் தமிழ்நாட்டின் துணை முதல்வராக பதவி வகித்தார். ஆனால் 2019ல் அரசியலில் களமிறங்கிய உதயநிதி, அதே ஆண்டில் இளைஞர் அணி செயலாளரானார். இந்தாண்டு அமைச்சரானாா்..2024ல் துணை முதல்வராக பதவியேற்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
Tags :