நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

by Editor / 30-04-2024 05:50:30pm
நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

அருப்புக்கோட்டை கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் கடந்த 2018ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் 6 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று அவர் குற்றவாளி என ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்திருந்தது. வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரை நீதிமன்றம் விடுதலை செய்தது. இந்நிலையில் நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 

 

Tags : நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

Share via

More stories