திமுகவோடு போட்டி போட உனக்கெல்லாம் தகுதியே இல்லை.தம்பி- அமைச்சர் நேரு.

திருவாரூர் தெற்கு வீதியில் திருவாரூர் மாவட்ட திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்பு பொதுக்கூட்டம் தமிழகத்தை தலைக்குனிய விடமாட்டேன் என்கிற தலைப்பில் அமைச்சர் நேரு தலைமையில் நடைபெற்றது.இதில் தொழில் துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.நேற்று இதே இடத்தில் விஜய் பரப்புரை செய்த நிலையில இன்று திமுக சார்பில் இந்த கூட்டம் நடைபெறுவதால் அதிகளவு திமுகவினர் வருகை தந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த கூட்டத்தில் அமைச்சர் நேரு பேசியதாவது
ஏற்கனவே ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிச்சாமி ஒவ்வொரு ஊராக செல்கிறார்.இந்த அரசு என்ன செய்து விட்டது என்றெல்லாம் சொல்கிறார்.பத்தாண்டில் செய்த காரியத்தை விட முதலமைச்சர் இந்த நான்காண்டுகளில் செய்திருக்கிறார்.உங்களுக்கு ஒன்று எச்சரிக்கையாக சொல்ல விரும்புகிறேன்.ஒரு காலத்தில் திமுக லிருந்து அதிமுக இப்படிதான் மாறி மாறி தமிழ்நாட்டில் இருந்தது.இன்றைக்கு இன்னொருவர் வந்து சொல்கிறார்.எங்களுடன் தான் நேரடியாக போட்டி என்றெல்லாம் திமுகவோட போட்டி போட உனக்கு தகுதியே இல்லை.தம்பி பாலு சொன்னது போல் கலைவாணனிடம் சொன்னேன் நேத்துதான் கூட்டம் போட்டுவிட்டு போறான்.நீ அடுத்த சொல்கிறாயே என்று நான் அடிச்சு காண்பிக்கிறேன் என்று இப்போது அடிச்சி காண்பிச்சாச்சு.எனவே இதை நான் சொல்வதற்கு காரணம் சும்மா இருந்தவனை கிளப்பிட்டீங்க இனிமேல் அது மீண்டும் 2026 இல் தமிழ்நாட்டு முதலமைச்சராக தளபதி அவர்களை அமர வைக்கும் வரை இந்தப் போராட்டம் ஓயாது.
எடப்பாடி பழனிச்சாமி எல்லாம் முதலமைச்சராக இருந்தார்.நான்கு வருடத்தில் அவர் என்ன செய்தார் எல்லாம் பூரா தெரியும்.நாலு வருடம் கழித்து மக்களுடன் ஸ்டாலின் என்றெல்லாம் ஆரம்பிக்கிறாரே நான்கு வருடம் என்ன செய்தார் என்று எடப்பாடி பழனிச்சாமி கேட்கிறார்.நீ நான்கு வருடம் வீட்டில் இருந்துவிட்டு நாலு வருடம் கழித்து வெளியே வருகிறாயே நீ எதற்கு வருகிறாயோ அதற்கு தான் நாங்களும் வருகிறோம்.
எனவே அதிமுக பாஜக கூட்டணி என்பது ஒரு அமையாத கூட்டணி.அதிமுக தொண்டர்கள் பாஜகவை ஏற்றுக் கொள்ளவில்லை.பாஜக வந்தால் அதிமுகவை கபளீகரம் செய்து விடும் என்று அதிமுக தொண்டர்கள் சொல்கிறார்கள்.எனவே தான் நம்முடைய முதலமைச்சரை மக்களுக்காக உழைக்கிற முதலமைச்சரை காப்பது தான் நமது கடமை.பாலு சொன்னதைபோல அவரைப் பற்றி எல்லாம் எந்த கவலையும் இல்லை.நிச்சயமாக இந்த டெல்டா பகுதி என்பது கழகத்தினுடைய கோட்டை.அதிலும் திருவாரூர் என்பது மிக மிக கோட்டை.
இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலை இருப்பது தமிழ்நாட்டில் தான் அதிக பெண்கள் வேலை பார்ப்பதும் தமிழ்நாட்டில் தான்.எனவே தான் இந்த நாட்டை முன்னோக்கி சென்றிருக்கிற தளபதி அவர்களை நாம் கலைஞரை இழந்து விட்டோம் இவர்தான் நமக்கு சரியான ஆள்.இவரை மீண்டும் மீண்டும் முதலமைச்சராக்கி இந்த நாட்டுக்கு உண்டாக்கிட வேண்டும் அதற்காக நாம் தொடர்ந்து உழைக்க வேண்டும்.
டிஆர்பி ராஜாவை பார்த்து அவனிடம் சொன்னேன் நான்.பஸ் ஸ்டாண்ட் கேட்டான் பஸ்டாண்டு கொடுத்தோம் ரோடு கேட்டான் ரோடு கொடுத்தோம்
நூலகம் கொடு என்றால் நூலகம் கொடுத்தோம்.சிலை வைக்கணும் என்றால் சிலை வைத்தோம்.பாலம் கொடுத்தோம் ஒரே ஒரு தொழிற்சாலை திருச்சிக்கு கொடு என்றால் அவன் கொடுக்க மாட்டேன் என்கிறான்.கொடுத்தால் கொடுத்தாய் என்று கூறப்போகிறேன்.
நம்முடைய கழக ஆட்சி என்பது சிறந்த ஆட்சி நம்மையெல்லாம் வாயை கட்டி போட்டு மேடையில் ஏற்றி விட்டார்கள்.தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள் மேற்கொண்டு நாங்கள் எதையும் சொல்ல முடியாது.இந்த கழகத்தை கட்டி காப்பது தான் நமது தலையாய கடமை என்று பேசினார்.
Tags : திமுகவோடு போட்டி போட உனக்கெல்லாம் தகுதியே இல்லை.தம்பி- அமைச்சர் நேரு.