மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக வளாகத்தில் பணம் எண்ணிக்கை வீடியோ வைரல் பரபரப்பு. அதிகாரிகள் மறுப்பு.

by Staff / 22-09-2025 08:38:14am
மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக வளாகத்தில் பணம் எண்ணிக்கை வீடியோ வைரல் பரபரப்பு. அதிகாரிகள் மறுப்பு.

தென்காசி மாவட்டம் தென்காசி குத்துக்கல்வலசை பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகின்றது இந்த போக்குவரத்து அலுவலகத்தில் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் பதிவு மற்றும் புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன இந்த வட்டார போக்குவரத்து அலுவலகத்தை நம்பி நூற்றுக்கணக்கானோர் அந்த பகுதியில் அலுவலகம் அமைத்து பயிற்சி பள்ளிகள் நடத்திய வருகின்றனர் இந்த நிலையில் அங்கு அருகில் உள்ள மைதானத்தில் பல்வேறு இருசக்கர வாகன நிறுவனங்கள் மற்றும் கார் நிறுவனங்கள் கனரகவாகன நிறுவனங்களின் பணியாளர்கள் வாகனங்களை பதிவு செய்வதற்காக காத்திருந்து வரும் சூழல் ஏற்பட்டுள்ளது இந்த நிலையில் அங்கு பணியாற்றும் அதிகாரிகள் புரோக்கர்கள் வைத்து கட்டுக்கட்டாக பணம் லஞ்சம் வாங்குவதாகவும் கும்பலாக இருந்து பணத்தை பங்கிடுவதாகவும் சம்பாதிப்பதாக வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது. இந்த வீடியோ காட்சிகள் பேசும் பொருளாக தென்காசி பகுதியில் மாறியதை தொடர்ந்து தொடர்ச்சியாக இது குறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தரப்பில் கேட்ட பொழுது தங்களது அலுவலகத்தில் எந்தவிதமான முறைகேடுகளும் நடைபெறவில்லை என்றும் மைதானத்தில் வாகனங்களை சோதனை செய்வது அதிகாரிகள் உடைய கடமை என்றும், வாகனங்கள் ஓட்டுவதை கண்காணித்து அங்கேயே ஓட்டுனர் உரிமம் வழங்குவதற்கு அனுமதி வழங்கப்படுவதாகவும் மைதானத்தில் உள்ள அறையில் தனியார் வாகன விற்பனை நிறுவனங்களில் பணியாளர்கள் உட்கார்ந்து புதிய வாகனங்களுக்கு பணம் கட்டுவதற்காக பணத்தை எண்ணுவது , செல்லான் கட்ட செல்வது ஈ செல்லான் கட்டுவது உள்ளிட்டவை  களுக்காக கொண்டுவரும் பணம் அதிகாரிகளுக்கு லஞ்சம் என்று தவறான வழியில் சித்தரிக்கப்படுவதாகவும் இது அதிகாரிகளை கெட்ட பெயரை ஏற்படுத்தும் விதமாக உள்ளதாகவும் தனி நபர்கள் யாரும் வாகனங்களை இங்கே பதிவு செய்ய வருவதில்லை என்றும் முறையாக வா புதிய வாகனங்களை வாங்கும் நிறுவனங்களைச் சார்ந்த பணியாளர்களை வந்து நிறுவனங்களில் வாகனங்களை பதிவு செய்து வாடிக்கையாளருக்கு வழங்கி வருவதாகவும் குறிப்பிட்ட சிலர் அதிகாரிகளின் பெயரை சொல்லி கூடுதலாக பணம் வசூலிப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து சில தனி நபர்களை அலுவலகத்திற்குள் அனுமதிக்காததே இதற்கு காரணம் மீண்டும் இது போன்ற தவறான தகவல்களை அவர்கள் பரப்பி வருவதாகவும் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

 

Tags : மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக வளாகத்தில் பணம் எண்ணிக்கை வீடியோ வைரல் பரபரப்பு. அதிகாரிகள் மறுப்பு.

Share via