பிரதமர் மோடிக்கு ஓபிஎஸ் பிறந்தநாள் வாழ்த்து

by Staff / 16-09-2023 05:43:05pm
பிரதமர் மோடிக்கு ஓபிஎஸ் பிறந்தநாள் வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி நாளை தனது 73-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி நாடு முழுவதும் பாஜக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் பலரும் பிரதமருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். அதன்படி, தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், “எளிய பின்னணியில் இருந்து தலைமைத்துவத்தின் உயர்ந்த நிலைக்கான உங்களின் பயணம் எண்ணற்ற இந்தியர்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது” என பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via