கேரளாவில் புகழ்பெற்ற ஆலப்புழா படகு போட்டி இன்று நடைபெற உள்ளது.

கேரள மாநிலம் ஆலப்புழாவில் நடைபெறும் புகழ்பெற்ற படகு போட்டிகளைக் காண உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் வழக்கமாக ஏராளமானோர் வருகை தருவார்கள். புகழ்பெற்ற இந்த படகு போட்டி, கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான படகு போட்டி இன்று நடைபெற உள்ளது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்த போட்டியை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி வைக்க உள்ளார். இந்த போட்டிக்களைக் காண இதுவரை 23 லட்சம் ரூபாய் வரை டிக்கெட்க்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Tags :