அல்வா கிண்டுகிறார் நிர்மலா சீதாராமன்

2023ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 31 முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறவுள்ளது. வரும் பிப்ரவரி 1ம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. இதையடுத்து பட்ஜெட்டை தயாரிக்கும் ஊழியர்களை அங்கீகரிக்கும் விதமாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது கையால் அல்வா கிண்டி வழங்கவுள்ளார். மத்திய நிதியமைச்சகத்தில் மரபாக பின்பற்றப்பட்டு வரும் இந்த நிகழ்ச்சி, இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெறவுள்ளது.
Tags :