அமைச்சர் துரைமுருகனின் கேள்விக்கு.-அண்ணாமலை பதிலடி

by Staff / 05-02-2024 03:16:38pm
 அமைச்சர் துரைமுருகனின் கேள்விக்கு.-அண்ணாமலை பதிலடி

தமிழகம் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ளதாக கூறியதற்கு அண்ணாமலை என்ன பொருளாதாரம் நிபுணரா.? என்று துரைமுருகன் கேள்வி எழுப்பி இருந்தார். அமைச்சர் துரைமுருகனின் கேள்விக்கு அண்ணாமலை  ,  லக்னோ ,ஐ.ஐ.எம்.மில்., எம் பி ஏ ஃபினான்ஸ் படித்துள்ளேன். 10 லட்சம் பேர் எழுதிய தேர்வில் 99. 4 சதவீதத்தில் தேர்ச்சி பெற்றுள்ளேன். கொஞ்சம் ஃபினான்ஸ் தெரியும். அமைச்சர் துரைமுருகனுக்கு தெரிந்ததை விட எனக்கு ரொம்ப அதிகமாக பினான்ஸ் தெரியும். எனக்கு ஒரு ஸ்டேட்மெண்டை படிக்க தெரியும். பட்ஜெட் டாக்குமெண்டை படிக்க தெரியும். மாநிலம் எதை நோக்கி செல்கிறது என்பது தெரியும். அமைச்சர் துரைமுருகன் வேண்டுமானால் படிக்காமல் இருக்கலாம். அந்த கதையை என்கிட்ட ஓட்ட வேண்டாம், என்று பதிலடிகொடுத்துள்ளாா்.

 

Tags :

Share via