முறிந்தது அதிமுக - பாஜக கூட்டணி

by Staff / 25-09-2023 05:29:18pm
முறிந்தது அதிமுக - பாஜக கூட்டணி

சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், கூட்டணி, தேர்தல் பணிகள் உள்ளிட்டவை குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த கே.பி முனுசாமி, பாஜக உடனான கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அறிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையுடனான மோதல் போக்கு நீடிக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via