ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து சிறப்பு பேரூந்துக்கள்.

தமிழகத்தில், வார இறுதி நாட்கள் மற்றும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சென்னையில், அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளது. அதன்படி 28ஆம் தேதி 460 பேருந்துகளும், 29ஆம் தேதி 530 பேருந்துகள் என மொத்தம் 990 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. 31ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை அன்று பல்வேறு இடங்களிலிருந்து சென்னைக்கும் மற்றும் இதர ஊர்களுக்கு 890 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
Tags : ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து சிறப்பு பேரூந்துக்கள்.