கனமழை காரணமாக புதுச்சேரி - காரைக்கால் பகுதிகளில் இன்று பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

by Admin / 18-11-2025 08:12:56am
கனமழை காரணமாக புதுச்சேரி - காரைக்கால் பகுதிகளில் இன்று பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களான ராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் தேனி திருநெல்வேலி கன்னியாகுமரி தூத்துக்குடி தென்காசி உள்ளிட்ட இடங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை மற்றும் புறநகர மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.  கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது...செ ன்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றுஇந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மாவட்டங்களில் பெய்யும் மழையை பொறுத்து அந்தந்த மாவட்ட நிர்வாகமே விடுமுறை அளிக்கலாம் என்பதால் மாவட்ட மழை நிலவரம் அடிப்படையில் விடுமுறைகள் அறிவிக்கப்படலாம்.

 

Tags :

Share via