தமிழக வெற்றி கழகம்- புதிய கட்சியை தொடங்கினார் நடிகர் விஜய்

by Staff / 02-02-2024 01:39:19pm
தமிழக வெற்றி கழகம்- புதிய கட்சியை தொடங்கினார் நடிகர் விஜய்

பிரபல நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குவார் என்று அண்மைக் காலமாக செய்திகள் வந்த வண்ணம் இருந்த நிலையில், அவருடைய கட்சி நிர்வாகிகள் டெல்லி தேர்தல் ஆணையத்தில் கட்சியை பதிவு செய்வதற்காக சென்றிருந்த நிலையில் ,இப்பொழுது விஜய் புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளதாக அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது ,.அதில், அவர் தன் கட்சியினுடைய பெயர் தமிழக வெற்றி கழகம் என்றும் அரசியலில் நான் பொழுதுபோக்காக ஈடுபடவில்லை என்றும் அரசியல் என் ஆழமான வேட்கை என்றும் அதில் குறிப்பிட்டதோடு இதில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளவே விரும்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். .அத்துடன் தான் ஏற்கனவே ஒப்புக் கொண்டுள்ள திரைப்பட சம்பந்தமான வேலைகளை இடையூறு இன்றி முடித்துவிட்டு முழுமையாக மக்கள் சேவையில் அதாவது, அரசியலில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றி கழகம்- புதிய கட்சியை தொடங்கினார் நடிகர் விஜய்
 

Tags :

Share via
Logo