சரஸ்வதி கோவிலில் வித்யாரம்பம் விழாவில் குழந்தைகளுக்கு நெல்மணிகளில் எழுதி பெற்றோர்கள் வழிபாடு.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட கூத்தனூரில் தென் இந்தியாவிலேயே மகா சரஸ்வதி ஆலயம் அமைந்துள்ளது. இங்கு தான் சரஸ்வதி தேவிக்கின்றே தனி ஆலயம் அமைந்துள்ளது. ஒட்டக்கூத்தர் என்னும் தமிழ் புலவருக்கு சரஸ்வதி தேவியின் அருள் கிடைக்க பெற்று ஒட்டக்கூத்தர் வழிபட்டதால் இந்த ஊர் கூத்தனூர் என பெயர் பெற்றது
இவ்வாறு வரலாற்று சிறப்புமிக்க இந்த ஆலயத்தில் தேர்வுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் பேனா, பென்சில், நோட்டு புத்தகம், வெள்ளை தாமரை கொண்டு தேர்வில் வெற்றி பெற இந்த அம்மனை தரிசித்து செல்வது வழக்கம்.
மேலும் ஆண்டுதோறும் இந்த கோவிலில் சரஸ்வதி பூஜை விழா, விஜயதசமி விழா வெகு விமர்சையாக நடைபெறும்.இந்த வருட விழாவை முன்னிட்டு நேற்று சரஸ்வதி பூஜை விழாக் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று விஜயதசமி விழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது சரஸ்வதி தேவி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது
இந்த விஜயதசமி விழாவை முன்னிட்டு விழாவின் முக்கிய நிகழ்வான வித்யா ஆரம்பம் கோலாகலமாக தொடங்கியது அதாவது குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு முன்னதாக இக்கோவிலில் விஜயதசமி நாளான இன்று குழந்தைகளை அழைத்து வந்து தமிழ் முதல் எழுத்தான அ என்ற எழுத்தை நெல்மணிகளில் எழுதி வித்யாரம்பம் செய்து வருகின்றனர்.
இந்த விழாவில் திருவாரூர் மட்டுமல்லாது தமிழகத்திலிருந்து பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பெற்றோர்கள் தம் குழந்தைகளை இந்த ஆலயத்திற்கு அழைத்து வந்து வித்யாஆரம்பம் எழுதி வருகின்றனர்,
மேலும் பாதுகாப்பு பணியில் நன்னிலம் துணை காவல் கண்காணிப்பாளர் தமிழ்மாறன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.
Tags : சரஸ்வதி கோவிலில் வித்யாரம்பம் விழாவில் குழந்தைகளுக்கு நெல்மணிகளில் எழுதி பெற்றோர்கள் வழிபாடு