அறுந்து விழுந்த தவெக கொடி.. சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

by Editor / 27-01-2025 09:42:18am
அறுந்து விழுந்த தவெக கொடி.. சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

ஈரோடு: பவானி அருகே அம்மாப்பேட்டை ஒன்றியத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அக்கட்சியினர் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் கட்சியை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். கட்சியின் கொடியை நிர்வாகி ஏற்றிய போது அனைவரும் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தநிலையில் கொடியானது கம்பத்தின் உச்சிக்கு சென்றவுடன் காற்றின் வேகம் காரணமாக கோடியில் வைக்கப்பட்டிருந்த மலர்களோடு அப்படியே கீழே விழுந்தது. இதனால் கட்சி நிர்வாகிகள் ஷாக் ஆனார்கள். இது தொடர்பான வீடியோ காட்சி  தவெகவினரை நக்கல் செய்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

 

Tags : அறுந்து விழுந்த தவெக கொடி.. சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது..

Share via