விஜய் கட்சி நிர்வாகிகளோடு இன்று முதல் 4 நாட்களுக்கு ஆலோசனை.

by Editor / 27-01-2025 09:32:43am
விஜய் கட்சி நிர்வாகிகளோடு இன்று முதல்  4 நாட்களுக்கு ஆலோசனை.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை கடந்த ஆண்டு தொடங்கினார். இதையடுத்து தமிழக வெற்றிக் வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு அக். 27ம் தேதி பிரமாண்டமாக நடந்தது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். மாநாட்டில் விஜய்யின் பரபரப்பான பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.-----

மாநாட்டை தொடர்ந்து 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக்கழகம் தயாராகி வருகிறது. இதற்காக, நிர்வாகிகள் நியமனம் தொடர்பான வேலைகள் த.வெ.க.வில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 

தமிழக வெற்றிக் கழகத்தில் 120 மாவட்ட செயலாளர்களை அறிவித்து அக்கட்சியின் தலைவர் விஜய் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தார். நிர்வாக வசதிக்காக தவெக 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு, ஒரு மாவட்டத்திற்கு மாவட்ட செயலாளர், இணை செயலாளர், பொருளாளர் என 15 பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பனையூர் அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளோடு இன்று முதல் (ஜன. 27) 4 நாட்களுக்கு விஜய் ஆலோசனை நடத்த உள்ளார்.

 

Tags : விஜய் கட்சி நிர்வாகிகளோடு இன்று முதல் 4 நாட்களுக்கு ஆலோசனை.

Share via

More stories

Logo