கரூர் சம்பவம் தனிநபர் ஆணைய விசாரணை நியாயம் இருக்காது -புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்.

புதுச்சேரியின் உள்துறை அமைச்சரான நமசிவாயம் தென்காசி மாவட்டத்திற்கு இன்று வருகை தந்தார் தொடர்ந்து அவர் தென்காசி நகர் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற சிவா ஆலயமான காசி விஸ்வநாதர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் தென்காசி மாவட்டத்திற்கு வருகை தந்த நிலையில் புதுவை மாநிலத்தில் தொழில்நுட்பத் துறையில் சிறந்த முன்னேற்றத்தை கொண்டு வரும் நோக்கத்தோடு ஜோகோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு மற்றும் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த பாஜக மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யாசாமியை சந்தித்து ஆலோசிக்கவும் மேலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் வாக்கு திருட்டு குறித்த கேள்விக்கு அவர் அவர் முன்வைக்கும் குற்றச்சாட்டை மனுவாக தேர்தல் ஆணையத்திடம் கொடுக்க வலியுறுத்தியும் இதுவரை கொடுக்க மறுப்பதற்கான காரணம் என்ன என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் போற போக்கில் புழுதி வாரி தூர்த்திவிட்டு போகும் போக்கில் பழி சொல்லிவிட்டு போகும் நோக்கில் உள்ளதாகவும் இந்த நாட்டுடைய வளர்ச்சிக்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முட்டுக்கட்டையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் பாண்டிச்சேரி மாநிலத்தின் முதலமைச்சர் ரங்கசாமி இதுவரை பாரதப் பிரதமரை சந்திக்காமல் இருப்பது குறித்து கேள்வி எழுப்பியதற்கு இதுவரை சந்திக்க தேவை ஏற்படவில்லை எனவும் மாநில அரசாங்கம் தங்கள் மாநிலத்திற்கு தேவையான அனைத்து மக்கள் நல திட்டங்களையும் முறையாக செயல்படுத்திக் கொண்டிருப்பதாகவும் சந்திக்க வேண்டிய நேரத்தில் அவர் நிச்சயமாக பாரத பிரதமரை சந்திப்பார் எனவும் அவர் தெரிவித்தார்.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் மேற்கொண்ட பயணத்தில் நடைபெற்ற சம்பவத்தை பொறுத்தவரை தனிநபர் ஆணையம் அமைத்துள்ள மாநில அரசு விசாரணையில் ஞாயம் இருக்காது எனவும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டால் மட்டுமே உண்மை வெளிவரும் எனவும் அதைத்தான் பாரதிய ஜனதா கட்சி சேர்ந்த தலைவர்கள் வலியுறுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்
Tags : கரூர் சம்பவம் தனிநபர் ஆணைய விசாரணை நியாயம் இருக்காது -புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்.