செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலையில் இன்று கனமழைவாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்.

வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்று தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலையில் இன்று கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, 12 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என கூறப்பட்டுள்ளது. இது, மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தெற்கு ஒடிசா-வடக்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளில் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.இதனால், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலையில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சியில் நாளை கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதே போன்று, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூரில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Tags : செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலையில் இன்று கனமழைவாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்.