ஜார்க்கண்ட் முதல்வராக பதவியேற்ற சம்பாய் சோரன்

by Staff / 02-02-2024 12:54:34pm
ஜார்க்கண்ட் முதல்வராக பதவியேற்ற சம்பாய் சோரன்

ஜார்க்கண்ட் மாநில புதிய முதல்வரமாக சம்பாய் சோரன் சற்றுமுன் பதவியேற்றார். ஜார்க்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் சட்டவிரோத பணப்பரிமாற்றம், நில மோசடி தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் ஜார்க்கண்டில் ஆட்சி அமைக்க சம்பாய் சோரனுக்கு நேற்று நள்ளிரவில் ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து சம்பாய் சோரன் ஜார்க்கண்ட் புதிய முதல்வராக தற்போது பதவியேற்றுள்ளார். 10 நாட்களில் அவர் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.

 

Tags :

Share via