மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த நண்பர்கள்

by Staff / 09-03-2024 04:18:02pm
மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த நண்பர்கள்

மேற்கு வங்கத்தில் 19 வயதுள்ள பெண்ணொருவர், கல்லூரி முதலாம் ஆண்டு படித்துவந்துள்ளார். இவர் தனது நண்பர்களுடன் பார்ட்டி ஒன்றுக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். பின்னர் நீண்ட நேரம் ஆகியும் மாணவி வீட்டிற்கு வராததால் அவரின் பெற்றோர்கள் தேடி சென்றுள்ளனர். அப்போது ஒரு அறையில் அரை மயக்க நிலையில் மாணவி இருந்துள்ளார். மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதித்து பார்த்ததில், அவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ரதீந்திர நாயக், சுபோ, டெபோஜோதி தத்தா, தமோஜித் சர்தர் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via

More stories