கொரோனா பாதிப்பு, இறப்பு விகிதம்  குறைந்துவருகிறது  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் 

by Editor / 04-06-2021 04:49:48pm
கொரோனா பாதிப்பு, இறப்பு விகிதம்  குறைந்துவருகிறது  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் 

 


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, இறப்பு விகிதம் குறைந்துவருகிறது  என சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கொரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்தார். பின்னர், ராணிப்பேட்டை மற்றும் வாலாஜாபேட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் 50 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்வ கொரோனா சிகிச்சை மையத்தை தொடங்கி வைத்தார். இதையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தமிழகத்தில் கொரோனா தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவிவரும் நிலையில், நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. அது மட்டுமின்றி, கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு விகிதமும் குறைந்து வருவது நம்பிக்கையளிக்கிறது.
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் நிரந்தரமான ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கவும், உள்கட்டமைப்பு ஏற்படுத்தவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்க மாவட்டம்தோறும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ராணிப்பேட்டை புதிய மாவட்டம் என்பதால், மாவட்டத்தில் உள்ள தலைமை மருத்துவமனையிலும் கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சை மையம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனையில் மற்றும் கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். ராணிப்பேட்டை அடுத்த வாலாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் விபத்தினால் கண் பார்வையிழந்த தற்காலிக செவிலியருக்கு பணி நிரந்தரத்திற்கான முன்னுரிமை மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கப்படும்" என்று கூறினார்.

 

Tags :

Share via