அனைவருக்கும் தடுப்பூசி என்ப து  ஏமாற்று வேலை: மம்தா குற்றச்சாட்டு 

by Editor / 04-06-2021 04:53:43pm
அனைவருக்கும் தடுப்பூசி என்ப து  ஏமாற்று வேலை: மம்தா குற்றச்சாட்டு 

 


அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு சொல்வது வெறும்புரளி என மேற்கு வங்கமுதல்வர் மம்தா கடுமையாக விமர்சித்துள்ளார்.
நாடு முழுவதும் கரோனா 2ஆவது அலையின் தாக்கம் தீவிரமடைந் துள்ளதால், தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வரு கின்றன. ஆனால், தேவைக் கேற்ப தடுப்பூசிகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள் ளது. 130 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகைகொண்ட இந்திய நாட்டில், கடந்தமூன்றரை மாதங் களாக தடுப்பூசிபோடும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால், ஏப்ரல் மாதஇறுதி வரை 21.85 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத் தப்பட்டு உள்ளது .
ஆனால் , அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் , ' வரும் டிசம்பர் மாதத்துக்குள் நாட்டில் உள்ள அனைவ ருக்கும் தடுப்பூசி போடப் படும் என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளார் . இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கப்பட்ட கோவாக் சின் தடுப்பூசி உற்பத்தி , ஜூன் மாதத்தில் மட்டுமே முழு விநியோகத்திற்கு தயாராக இருக்கும் என்று கூறப்படுகிறது . இது தொடர்பாக , ஏப்ரல் 15 ஆம் தேதி பயோடெக்னாலஜி துறையின் அறிக்கையின் படி , பாரத் பயோடெக் நிறுவனம் ஜூலை முதல் ஆகஸ்ட் வரை ஒரு மாதத் திற்கு 6-7 கோடி தடுப்பூசி களையும் , செப்டம்பர் முதல் ஒரு மாதத்திற்கு 10 கோடி அளவையும் உற் பத்தி செய்ய உள்ளது . இது ஜூலை _ - டிசம்பர் மாதங் களுக்குள் குறைந்தது 52 கோடி அளவுகளில் உற் பத்தி செய்ய உள்ளது .
இதுமட்டுமின்றி , மக்க ளுக்கு கோவிஷீல்டு தடுப் பூசிகள் போடப்பட்டு வரு கின்றன . மேலும் , புட்னிக் - 5 போன்ற தடுப்பூசிகளும் இந்தியா வந்துள்ளன . தற் போதைய நிலையில் , 15% பேருக்கு தடுப்பூசியில் ஒரு டோஸ் மட்டுமே கிடைத் துள்ளதால் , அடுத்த 7 மாதத்திற்குள் அனைவருக் கும் தடுப்பூசி போடப்படும் உஎன்பது சாத்தியமாகுமா என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது .ஆனால் , மத்தியஅரசோ 4 மாதத்தில் 20 கோடிக்கு மேலோனோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது , அதனால் சாத் தியமாகும் என கூறுகிறது . ஆனால் மத்திய அரசின் அறிவிப்பு மக்களை ஏமாற் றும் செயல் என எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன .
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா டிசம்பருக்குள் அனைவருக்கும் தடுப்பூசி என்பது வெறும் புரளி என கடுமையாக விமர்சித்து உள்ளார் .

 

Tags :

Share via