காஷ்மீரில் முழு அடைப்பு போராட்டம்

காஷ்மீரில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் , அம்மாநிலத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது. இதனால், அனைத்து கடைகளும், வர்த்தக நிறுவனங்களும் அடைக்கப்பட்டு உள்ளன. இதனால், ஆள் நடமாட்டம் இன்றி முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. மாநிலம் முழுதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாத தாக்குதல் நடந்த இடத்திற்குச் சென்று என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையிட்டு விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளனர். என்.ஐ.ஏ அதிகாரிகள், பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் போலீசாருக்கு உதவுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags : காஷ்மீரில் முழு அடைப்பு போராட்டம்