அட்டாரி-வாகா எல்லை மூடப்படுகிறது: மத்திய அரசு..

by Editor / 23-04-2025 10:41:04pm
அட்டாரி-வாகா எல்லை மூடப்படுகிறது: மத்திய அரசு..

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான அட்டாரி-வாகா எல்லை உடனடியாக மூடப்படும்.

பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக அட்டாரி-வாகா எல்லை மூடப்படுகிறது.

பாகிஸ்தானியர்கள் இந்தியா வருவதற்கான விசா தற்காலிகமாக ரத்து - மத்திய வெளிறவுத்துறை செயலாளர்.

SVES விசாவில் தற்போதுள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் வெளியேற அரசு உத்தரவு.

பாகிஸ்தானுக்கு கடந்த காலத்தில் வழங்கப்பட்ட SVES விசாக்கள் ரத்து.

SAARC விசா விலக்கு திட்டத்தின் கீழ் பாகிஸ்தானியர்கள் இந்தியா வர அனுமதியில்லை.

பாகிஸ்தான் நாட்டு தூதரக அதிகாரிகள் வரும் மே 1ம் தேதிக்குள் இந்தியாவை விட்டு வெளியேற மத்திய அரசு அதிரடி உத்தரவு.

பாகிஸ்தான் உடனான தூதரக உதவிகளை குறைக்க முடிவு செய்துள்ளதாக வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி அறிவிப்பு.

 

Tags : அட்டாரி-வாகா எல்லை மூடப்படுகிறது: மத்திய அரசு.

Share via