நாளை நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு.

by Editor / 22-06-2024 11:56:51pm
நாளை நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு.

நாளை நடைபெறவிருந்த முதுகலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. விரைவில் புதிய தேதி அறிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு முறைகேடு புகாரால் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு முறைகேடு எதிரொலியால், தேசிய தேர்வு முகமையின் தலைவர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தேசிய தேர்வு முகமையின் தலைவராக பிரதீப் சிங் கரோலா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

Tags : நாளை நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு

Share via