100 ரூபாய் நாணயத்தை வெளியிட்ட குடியரசு தலைவர்
ஒன்றுபட்ட ஆந்திரப் பிரதேசத்தின் பிரபல நடிகரும், முன்னாள் முதலமைச்சருமான என்.டி.ராமாராவ் நூற்றாண்டு விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று அவரது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார். 44 மில்லி மீட்டர் சுற்றளவு கொண்ட இந்த நாணயம் 50 சதவீதம் வெள்ளியும், 40 சதவீதம் செம்பு, 5 சதவீதம் துத்தநாகம், 5 சதவீதம் நிக்கல் கலவையால் உருவாக்கப்பட்டுள்ளது. நாணயத்தின் ஒரு புறத்தில் 3 சிங்கங்களுடன் அசோக சக்கரமும், மறுபுறத்தில் என்.டி.ஆர்.ராமராவ் உருவமும் பதிக்கப்பட்டுள்ளது.
Tags :