மதுரைக்கு வரும் நடிகர் விஜய் உற்சாக வரவேற்பளிக்க திரளும் தொண்டர்கள்.

படப்பிடிப்பிற்காக கொடைக்கானல் செல்லும் நடிகர் விஜய் நாளை மதுரை விமான நிலையத்திற்கு வருகிறார் - ஜனநாயகன் படத்தின் பிளாஷ்பேக் காட்சிகள் படப்பிடிப்பிற்காக கொடைக்கானல் செல்வதாக தகவல்.
சென்னையிலிருந்து விமான மூலம் மதுரைக்கு வரும் விஜய் சாலை மார்க்கமாக மதுரையிலிருந்து கொடைக்கானல் செல்லவிருக்கிறார்.
மதுரைக்கு விஜய் வரும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது மதுரை விஜய் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. கட்சி துவங்கி முதல் முறையாக மதுரைக்கு வரும் விஜயை வரவேற்க்க தமிழக வெற்றி கழக தொண்டர்களும் விஜய் ரசிகர்களும் ஏராளமாக விமான நிலையத்தில் நாளை காலை திரளுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக வெற்றி கழகத்தின் பூத் கமிட்டி மாநாடு கோவையை தொடர்ந்து மதுரையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது படப்பிடிப்பிற்காக விஜய் மதுரைக்கு வரும் சூழல் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது
Tags : மதுரைக்கு வரும் நடிகர் விஜய் உற்சாக வரவேற்பளிக்க திரளும் தொண்டர்கள்.