25 இளைஞர்கள்... 10 வயது சிறுமியை அடித்து கொன்ற கொடூரம்

by Staff / 17-11-2022 11:43:35am
25 இளைஞர்கள்... 10 வயது சிறுமியை அடித்து கொன்ற கொடூரம்

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினர் ஆறு பேர் அங்கிருக்கும் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில், ஆட்டோவில் புறப்பட்டு சென்றனர். இதனிடையே, கோவிலில் இருந்த பித்தளை பொருட்களை திருடிக் கொண்டு ஆட்டோவில் செல்வதாக அந்தப் பகுதி இளைஞர்களுக்கு சிலர் தகவல் தெரிவித்தனர். உடனே 25 இளைஞர்களும் அந்த ஆட்டோவை விரட்டிச் சென்றனர். ஆட்டோ மடக்கிப் பிடித்தவர்கள் ஆட்டோவில் இருந்தவர்களை கடுமையாக தாக்கினர். அந்த ஆட்டோவுக்குள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் இருந்தனர். அந்த ஆறு பேரில் 10 வயது சிறுமியை கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுமி உட்பட அந்த குடும்பத்தினரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் 10 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

 

Tags :

Share via