சபரிமலைக்கு சிறப்பு சொகுசு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்

by Staff / 17-11-2022 11:46:05am
சபரிமலைக்கு சிறப்பு சொகுசு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டு மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைக்காக கார்த்திகை மாதம் முதல் தேதியான இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் அதிகமானோர் மாலை அணிந்து செல்வார்கள்.இந்நிலையில், போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வெளியிட்ட அறிவிப்பில், "சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை திருவிழாக்களின் போது தமிழகத்தில் இருந்து ஐயப்ப பக்தர்கள் சென்று வருவதற்கு ஏதுவாக, தமிழகத்தில் முக்கிய பகுதிகளில் இருந்து அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த ஆண்டும் 17ஆம் தேதியான இன்று முதல் 2023ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி வரை சென்னை, மதுரை, திருச்சி, கடலூர் ஆகிய நகரங்களில் இருந்தும், புதுச்சேரி மாநிலத்தில் இருந்தும் பம்பைக்கு அதே நவீன சிறப்பு சொகுசு பேருந்துகள் இயக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.
 

 

Tags :

Share via